ஒருவர் எந்த வேலை செய்தாலும் மதிக்க வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து

தொழிலில் சிறியது, பெரியது என ஒன்றுமில்லை அனைத்து வேலைகளையும் மதிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் கலந்து கொண்டார்.

 

அப்போது பேசிய அவர் ஒருவர் எந்த வேலை செய்தாலும் அதை மதிக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் மதிக்கப்படாதது தான் வேலை வாய்ப்பின்மை அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது எனவும் கூறினார்.

 

எல்லா வேலையும் மதிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டவர் எல்லோரும் வேலைக்கு பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம் என்றும், தொழிலில் சிறியது பெரியது என்று ஒன்றும் இல்லை எனவும் தெரிவித்தார்.