குடிநீர் தொட்டிக்குள் கொலை செய்து வீசப்பட்ட நாய்..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பொதுமக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் நாய் சடலம் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

 

அதன்படி நேற்று ஊராட்சி பணியாளர் ராமமூர்த்தி குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய நேரிடபோது குடிநீர் தொட்டிக்குள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து குடிநீர் தொட்டியில் இருந்த நாயின் உடல் மீட்கப்பட்டு குடிநீர் தொட்டி முழுவதும் குளோரின் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

 

இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து காவலர்கள் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.