108 நம்ம கிளினிக்குகளை தொடங்கி வைத்தார் கர்நாடகா முதல்வர்..!

பெங்களூரு மாநகராட்சியில் 108 நம்ம கிளினிக்கை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார். பெங்களூரு மாநகராட்சி 108 நம்ம மருத்து கிளினிக்கில் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இன்று பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார் எனவும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

 

கிளினிக்குகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தலா ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், டி பிரிவு ஊழியர்கள் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிளினிக் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 4:30 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.