இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு..!

ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27-ம் தேதிய இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தேமுதிக, நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடுகின்றனர்.

 

இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 31ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று வரை 59 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைகிறது.