முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு கட்டாயம்..!

முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை கட்டாயம் வகுப்புகள் நடத்த வேண்டும் கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

 

2022 – 2023 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தாமதமானதால் பாடத்திட்டத்தை உரிய நேரத்தில் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாடத்திட்டத்தை உரிய நேரத்தில் நடத்தி முடிக்கும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

 

01.05.2023க்குள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை நடத்தி முடித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.