சிக்கன் சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 137 பேருக்கு வாந்தி, மயக்கம்..!

ர்நாடகாவில் நர்சிங் கல்லூரி மாணவர்கள் 137 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு சிக்கன், நெய் அரிசி சாதம் உணவு வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

 

உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு பாதிக்கப்பட்ட மாணவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். இதைதொடர்ந்து மாணவ, மாணவிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.