யூடியூப் வீடியோ பார்த்துவிட்டு திருட சென்ற இளைஞர்கள்..!

காவல்துறையிடம் பிடிபடாமல் நகை பறிப்பில் ஈடுபடுவது எப்படி என வீடியோ பார்த்து விட்டு திருட வந்தவர்கள் முதல் முயற்சியிலேயே அந்த நபர்கள் காவல் துறையினரிடம் பிடிபட்டனர். ராமாபுரத்தை சேர்ந்த ராதா என்பவர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.

 

அப்பொழுது அவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இளைஞர்கள் இருவர் அவர் அணிந்திருந்த நான்கு பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

 

புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கடும் சவாலுக்கு பிறகு மதுரவாயல் நெற்குன்றத்தை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.