--- --:--:-- --

நாய் குட்டியை திருடிய இன்ஜினியரிங் மாணவ, மாணவிகள்..!

7

கேரளாவில் இருந்து நாய் குட்டியை திருடி சென்ற இரு இன்ஜினியரிங் மாணவர்கள் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர்கள் நிகில், ஸ்ரேயா. இவர்கள் இருவரும் பைக்கில் கொச்சி வந்துள்ளனர்.

 

அங்குள்ள நாய் குட்டிகள் விற்பனை செய்யும் மையத்துக்கு சென்றுள்ளனர். பேசிக் கொண்டிருக்கும் பொழுதே கடையில் இருந்தவரின் கவனத்தை திருப்பி விட்டு அங்கிருந்து குட்டி நாயை ஹெல்மெட்டுக்குள் மறைத்து வைத்துவிட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து பைக்கில் சென்று விட்டனர்.

 

கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்பொழுது பைக்கில் இருவரும் உடுப்பி சென்றது தெரிய வந்தது. திருடியவர்களின் வீட்டிற்கு சென்று நாய்க்குட்டியை மீட்டனர்.

 

அதோடு இருவரும் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட நாய்க்குட்டியின் மதிப்பு 15 ஆயிரம் ரூபாயாகும். கைது செய்யப்பட்டவர்கள் கொச்சி கொண்டுவரப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon