--- --:--:-- --

பைக்கில் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்..!

5

திருச்சியில் சாலை விதிகளை மதிக்காமல் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்ட காட்சிகள் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. நகர் பகுதி சாலைகளில் தலைக்கவசம் கூட அணியாமல் பகலில் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து ட்ரிபிள் சென்றும், வீலிங் செய்தும் இளைஞர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டுள்ளனர்.

 

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவும் நிலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு வருவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon