கால் உடைந்த நிலையிலும் ஆல்யா மானசா இப்படியா?
ஆல்யா மானசா விஜய் டிவியின் ராஜா ராணி தொடர் மூலமாக நடிகையாக பாப்புலர் ஆனவர் ஆல்யா மானசா. அதில் அவர் ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது அவர் மிகவும் பிசியாக இனியா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஆல்யாவுக்கு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு இருக்கிறது. அவர் ஹாஸ்பிடலில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்த நிலையில் ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.
இந்நிலையில் தற்போது ஆல்யா உடைந்த காலுடன் சீரியல் ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருக்கிறார். இந்த விஷயத்தை அவரது கணவர் சஞ்சீவ் தான் வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




