தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இயல்பை விட மழை குறைவு..!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக மழை பதிவாகி இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பருவமழை தொடங்கியதிலிருந்து நேற்று காலை 8.30 மணி அளவில் படி 41 செ.மீ மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் சற்று அதிகமாக 44.5 சென்டிமீட்டர் மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், நெல்லை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவே மழை பொழிந்திருக்கிறது எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





