தாயார் இறந்த நிலையிலும் கடமை தவறாத பணியாற்றிய பிரதமர் மோடி..!
தாய் இறந்த நிலையிலும் கூட கடமை தவறாது அரசு பணிகளை மேற்கொண்டவர் பிரதமர் மோடி என இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவரும் பெரம்பலூர் மக்களவை உறுப்பினருமான பாரிவேந்தர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னின் உருவ படத்திற்கு சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது, பல்வேறு கட்சி தலைவர்களும் இதில் பங்கேற்று ஹீரா பென்னுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவரும், பெரம்பலூர் எம்பியுமான பாரிவேந்தர் ஹீரா பென்னின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பிரதமர் மோடியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





