பட்டாசு வெடி விபத்து – தரைமட்டமான ஐந்து வீடுகள்
நாமக்கல் அருகே பட்டாசு விற்பனையாளர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த வெடிகள் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். 13-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த குமார் அனுமதி பெற்று பட்டாசு விற்பனை செய்து வருகிறார்.
குமரிபாளையத்தில் பட்டாசு குடோன் வைத்துள்ளார். இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக விற்பனை செய்ய குடோனில் இருந்த பட்டாசை தனது இல்லத்திற்கு எடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் விபத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் வீட்டிலிருந்து சிலிண்டர் வெடித்ததில் தில்லை குமாரின் வீடு உட்பட 5க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் எரிந்து தரைமட்டமானது.
மேலும் அருகில் இருந்த வீடுகளில் மேற்கூரைகளும் இடிந்து சேதம் அடைந்துள்ளன. விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் தற்பொழுது பலி எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





