சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை வெளியீடு..!
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்சி 2023 ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு தேதிகளை அறிவித்திருக்கிறது.
அதன்படி பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச்21 ஆம் தேதி வரையிலும், 12-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 3.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





