பிரபல கால்பந்து வீரர் பீலே மரணம்..!
பிரேசிலின் பிரபல கால்பந்து வீரர் பிலே உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 82 வயதான பீலேவுக்கு குடல் பகுதியில் இருந்த புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
அவருக்கு ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல் உடல்நலம் தேறாமல் இருந்து வந்துள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து வரலாற்றில் அதிக முறை ஹேட்ரிக் கோல் அடித்த பீலே உலககோப்பை கால்பந்து போட்டிகளில் மூன்று உலக கோப்பைகளை பெற்றிருக்கிறார். அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றிருக்கிறார். பீலேவின் மறைவுக்கு உலக கால்பந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





