--- --:--:-- --

சீட்டு நடத்தி இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்தவர் கைது..!

7

திருப்பூரில் சீட்டு நடத்தி இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களாக மளிகை கடை நடத்தி வந்த குமார் என்பவர் அந்த பகுதி மக்களிடம் மாதம் மற்றும் வார தவணை அடிப்படையில் சீட்டு நடத்தி வந்தார்.

 

இதனை நம்பி 20க்கும் மேற்பட்டவர்கள் மாதம் மற்றும் வாரத் தவணையில் சீட்டை போட்டுள்ளனர். இந்த நிலையில் வாரம் 100 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை தவணையாக, இரண்டு கோடி ரூபாய் வரை பணம் பெற்றுள்ளனர்.

 

இந்த நிலையில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு பணத்தை தருவதாக கூறிய குமார் திடீரென குடும்பத்தோடு தலைமறைவானதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்த பொது மக்கள் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் குமாரை தேடி வந்த காவல்துறையினர் கேரளாவில் குடும்பத்துடன் வந்த 15 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon