தெருவில் சிறுநீர் கழித்த வியாபாரி..அறிவுரை கூறிய காவலருக்கு கத்தி குத்து..!
மும்பையில் தெருவில் சிறுநீர் கழிக்க கூடாது என்று கூறி தடுத்த காவலரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் வியாபாரி ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார்.
அப்பொழுது தலைமை காவலர் ஒருவர் சாலையில் சிறுநீர் கழிக்க கூடாது எனவும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து போலீசை அவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதனால் காவல் நிலையத்தில் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





