பொங்கல் பரிசு தொகை குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார்..!
பொங்கல் பரிசுதொகுப்பு குறித்த அறிவிப்பை முதலமைச்சரு மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு பொங்கல் பண்டிகையின் பொழுது பச்சரிசி, நெய், முந்திரி, கரும்பு உள்ளிட்ட 20 பொருட்கள் கொண்ட பரிசுத் தொகப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பொங்கலுக்கு பரிசுத்தொகுப்பு வழங்குவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அதன்படி கடந்தாண்டை போல பொருட்கள் கொண்ட பரிசுத் வகுப்பு வழங்கலாமா அல்லது பணமாக வழங்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கலைவாணர் அரங்கில் பொது விநியோக திட்டத்தில் சரிவூட்டப்பட்ட அரிசி வழங்குவது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை நடத்தினார்.
பிணர் செய்தியாளர்களிடம் பேசியவர் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து பொது விநியோகத் திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என கூறினார். மேலும் பொங்கல் பரிசு வழங்குவது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





