--- --:--:-- --

இரண்டு வயது குழந்தை நீரில் மூழ்கி பரிதாப பலி..!

3.1

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அங்கன்வாடி மையத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது ஆண் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தது. நவீன் குமார் என்று குழந்தை அங்கன்வாடி மையத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

 

திடீரென இன்று மதியம் ஒரு மணி அளவில் குழந்தையை காணவில்லை என உறவினர் பெற்றோர் தேடியுள்ளனர். அப்பொழுது அங்கன்வாடி மையத்தில் உள்ள பாதுகாப்பு இல்லாத ஒரு குட்டையில் குழந்தையின் செருப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

 

குழந்தையின் செருப்பை வைத்து அடையாளம் கண்டு குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் குழந்தையின் சடலத்தை மீட்டு அருகில் உள்ள அரச ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் வேலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon