நடமாடும் காய்கனி அங்காடிகளை தொடங்கி வைத்த முதல்வர்..!
நடமாடும் காய்கனி அங்காடிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 15 கோடியே 40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தென்னங்கன்று மற்றும் பயிர் விதைகளை வழங்கினார்.
மேலும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன்னுக்கு கூடுதலாக 195 ரூபாய் செலவிடுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
பின்னர் 20 நடமாடும் காய்கறி அங்காடிகளை தொடங்கி வைத்தார். கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் பண்ணை காய்கறிகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





