மதுரை மாட்டுத்தாவணியில் முழு கடை அடைப்பு போராட்டம்..!
மாட்டுத்தாவணி காய்கறி சந்தை வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் மாநகராட்சிக்கு சொந்தமான 1834 கடைகள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த கடைகளுக்கு மாதம்தோறும் 2,000 ரூபாய் வாடகை இருந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு முதல் 5,654 ரூபாயாக வசூலிக்கப்பட்டது. தற்பொழுது வாடகை தொகை 6,828 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடுதல் வாடகை கேட்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சிக்கு எதிராக முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றுள்ளனர். இதனால் சந்தைக்கு வரக்கூடிய காய்கறிகள் தடைபட்டுள்ளது. இருப்பினும் சில வியாபாரிகள் மற்றும் ஒரு சில கடைகளை சேர்ந்தவர்கள் வழக்கம் போல் செயல்பட்டனர். அரசு விதிகளின்படி மூன்றாண்டுக்கு ஒரு முறை வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





