--- --:--:-- --

போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்டா ரீல்ஸ் எடுத்த இளைஞர்..!

5

மதுரையில் காவல் நிலையத்தில் வீடியோ எடுத்து ரீலிஸ் செய்த இளைஞர்களிடம் போலீசார் விசாரித்த பொழுது போதை மாத்திரைகளை விற்று வருவது தெரிய வந்தது.

 

தல்லாகுளம் காவல் நிலையத்தில் வீலிங் போட்டபடி வந்த வரையும் அவரை வீடியோ எடுத்த குமரனையும் காவல் உதவி ஆணையர் ஜெகநாதன் பிடித்து விசாரித்த பொழுது சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவேற்றுவதற்காக வீடியோ எடுத்தது தெரிய வந்தது.

 

அவர்களது செல்போனில் போதை தரக்கூடிய புகைப்படங்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அது குறித்து விசாரித்த பொழுது கல்லூரி பார்மசியில் பணியாற்றி வரும் ஆசாருதீன் மற்றும் இருவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அவர்களிடம் இருந்த போதை தரக்கூடிய மாத்திரைகளை வாங்கி கல்லூரி மாணவர்களுக்கு விற்றது தெரிய வந்தது. இதையடுத்து நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon