பிரபல சினிமா தயாரிப்பாளர் திடீர் மரணம்..!
பிரபல சினிமா தயாரிப்பாளர் முரளிதரன் மாரடைப்பு காரணமாக காலமானார். சென்னையை சேர்ந்த முரளிதரன் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு சென்ற பொழுது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அன்பே சிவம், சிலம்பாட்டம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட 30 திரைப்படங்களை முரளிதரன் தயாரித்துள்ளார்.
இவரது மறைவிற்கு திரைத்துறையினர் தெரிவித்துள்ளனர். முரளிதரன் உடல் ஆம்புலன்ஸ் மூலமாக சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. லக்ஷ்மி மூவி மேகஸ் அதிபர்களில் ஒருவரான முரளிதரண் மறைவுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





