அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதிகளில் வரும் ஐந்தாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும், 8ம் தேதியில் தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளின் அருகே நிலவக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வரும் 4,5 மற்றும் ஆறாம் தேதிகளில் வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி வீசப்படும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





