காதலை ஏற்க மறுத்த பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர்கள்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியின் கிராமத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து கிராம மக்கள் போலீசில் ஒப்படைத்தனர். கல்லூரி மாணவியை காவிரிபட்டினத்தை சேர்ந்த ஒருவரது மகன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளான்.

 

இந்நிலையில் கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவியிடம் விஜய் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து நண்பர்கள் 10 பேருடன் சென்று ரகளையில் ஈடுபட்டு இருக்கின்றார்.

 

விவரம் அறிந்த கிராம மக்கள் அந்த இளைஞர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.