தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு..!

ந்தமான் கடல் பகுதிகளில் வரும் 5ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.