ஹீரோயின் ஆன பிக் பாஸ் சுருதி..!

டந்த வருடம் நடந்த பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் சுருதி பெரியசாமி. அவர் விஜய் டிவியில் அதன் பின் நடந்த பிக் பாஸ் ஜோடிகள் டான்ஸ் ஷோவிலும் கலந்துகொண்டார். ஆனால் அந்த ஷோவில் அவர் ஆடிய நடனம் ட்ரோல்களை சந்தித்தது.

 

அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் சுருதி இன்ஸ்டாகிராமில் வழக்கம்போல கிளாமர் போட்டோக்கள் தான் அதிகம் வெளியிட்டு வந்தார்.இந்நிலையில் தற்போது சுருதிக்கு ஹீரோயின் வாய்ப்பு வந்திருக்கிறது. அவர் சசிகுமார் ஜோடியாக நந்தன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் போஸ்டரும் தற்போது வெளியாகி இருக்கிறது.