மது போதைக்கு அடிமையான தலைமை ஆசிரியர் மனைவி கண்டித்ததால் விபரீத முடிவு..!

னைவி கண்டித்ததால் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் அருகில் உள்ள ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

 

மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகியதால் அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரவிக்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.