முகம் வீங்கிய ஸ்ருதிஹாசனின் அதிர்ச்சி புகைப்படம்..!

னுஷின் 3 படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த வாரிசாக சினிமாவில் நுழைந்தாலும் தனது நடிப்பின் மூலம் ஒரு சில படங்களிலேயே முத்திரை பதித்தார். அவர் தமிழில் அதிகபடங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

 

மேலும் சோசியல் மீடியாக்களும் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் வீங்கி இருக்கும் அதிர்ச்சியூட்டும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். சுருதி ஹாசன் தற்பொழுது என்பிகே 107 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

 

இந்நிலையில் சுருதிகாசன் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். மேலும் டாப்னே ஷ்மோன் என்ற பெண் இயக்குனர் இயக்கும் ‘தி ஐ’ என்ற படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார். மார்க் ரவுலி கதாநாயகனாக நடிக்கும் இப்படம் சைக்கோ திரில்லர் ஜோனரில் உருவாகவுள்ளது. தமிழில் புதிய படவாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக சலார் படத்தில் நடித்து வருகிறார்.

 

ஸ்ருதிஹாசன் சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவுடன் நடித்துள்ள வீர சிம்மா ரெட்டி ஆகிய படங்கள் 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை மட்டும் வெளியிடும் ஸ்ருதிஹாசன் மேக்கப் இல்லாத சில புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

 

பர்ஃபெக்ட்டான செல்ஃபிகள் மற்றும் பதிவுகள் நிறைந்த இவ்வுலகில் பைனல் கட்டாக வராத சில புகைப்படங்கள் உங்களுக்காக இதோ! மோசமான ஹேர் நாள், ஜுரம் மற்றும் சைனஸ் காரணமாக முகம் வீங்கிய நாள், மாதவிடாய் நாட்கள் மற்றும் இன்னும் பல என இவற்றையும் நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன் என்றும் விசித்திரமான புகைப்படங்களையும் அதற்கான காரணத்தையும் பதிவிட்டுள்ளார்.

 

திரை உலகின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வரும்ஸ்ருதிஹாசன் இப்படி வெளிப்படையாக தனது புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறார். இப்படி இயல்பாக இருக்கும் நடிகைகளை பார்ப்பதற்கும் விசித்திரமாக தான் உள்ளது.