ஆன்லைன் ரம்மியால் யாராவது இறந்தால் ஆளுநர் ஆர்.என். ரவி தான் பொறுப்பு..!
ஆன்லைன் ரம்மியால் யாராவது இறந்தால் ஆளுநர் ஆர்.என். ரவி தான் பொறுப்பு என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மயிலாடுதுறை அடுத்த நிலத்துக்குடியில் நடைபெற்ற பாமக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசினார்.
அப்பொழுது தமிழ்நாட்டில் பெய்யும் பெரும் அளவு மழை நீரின் வடிகாலாக இருக்கும் மயிலாடுதுறை மாவட்டத்தை உடனடியாக பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
தற்பொழுது மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு பயிர் பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பதில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





