ஜீ தமிழ் முக்கிய சீரியலில் இருந்து விலகிய ஹீரோயின்!
தற்போது 85 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் ஜீ தமிழில் முக்கிய சீரியல்களில் ஒன்றாக மாறி இருக்கிறது.
இரவு 9 மணி ஸ்லாட்டில் சன் டிவி, விஜய் டிவி முக்கிய சீரியல்களை ஒளிபரப்பி வரும் நிலையில் அதற்கு போட்டியாக ஜீ தமிழ் அறிமுகப்படுத்திய சீரியல் தான் மீனாட்சி பொண்ணுங்க.
இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த மோக்ஷிதா தற்போது இந்த தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார். சொந்த காரணங்களுக்காக தான் வெளியேறுவதாக அவர் கூறி இருக்கிறார். அவர் திடீரென வெளியேறியது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




