மயிலாடுதுறையில் ரூ.1000 நிவாரணம் நாளை முதல் விநியோகம்..!
மயிலாடுதுறையில் கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தொகை நாளை முதல் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 மற்றும் 11ம் தேதி பேர் கனமழையால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன.
இதனை நேரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள 239 நியாய விலை கடைகளில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 647 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் நியாய விலை கடைகளில் நாளை முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





