--- --:--:-- --

செம்மரக்கட்டைகளை கடத்திய ஒன்பது பேர் கைது..!

1

செம்மரக்கட்டைகளை கடத்தியதாக ஆந்திராவில் தமிழர்கள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். அன்னமையா மாவட்டத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது சுங்க பள்ளியில் இருந்து வந்த டாடா சுமோ வாகனத்தை சோதனையிட்டனர்.

 

வாகனத்தில் செம்மரக்கட்டைகள் இருந்ததை கண்டறிந்து ஆந்திர காவல்துறையினர் கடத்தலில் ஈடுபட்டதாக 9 பேரை கைது செய்தனர். இவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

 

50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 46 செம்மரக்கட்டைகளை கடத்தலுக்கு பயன்படுத்தியது வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon