ஹன்சிகா திருமணத்திற்கு காஸ்ட்லி அழைப்பிதழ்..!
நடிகை ஹன்சிகா தற்போது பிசியான நடிகையாக இருக்கும் நேரத்திலேயே அவரது திருமணத்தை அறிவித்து இருக்கிறார். அவரது திருமணம் வரும் டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.
சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை ஹன்சிகா காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் நடைபெறுகிறது. டிசம்பர் 2ம் தேதி தொடங்கி 4ம் தேதி வரை திருமண விழா நடைபெற இருக்கிறது. அதன் ஒளிபரப்பு உரிமையை ஒரு பிரபல ஓடிடி நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் ஹன்சிகாவின் திருமண அழைப்பிதழ் வீடியோ கசிந்திருந்தது. அழைப்பிதழுக்காக அதிகம் செலவழித்து அதை போட்டோ ப்ரேம் போல உலோகத்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




