--- --:--:-- --

தொண்டரின் குழந்தைக்கு திராவிடன் என பெயர் சூட்டிய முதல்வர்..!

9

சிதம்பரத்தில் தொண்டரின் ஆண் குழந்தைக்கு திராவிடன் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெயரிட்டார். மயிலாடுதுறையில் வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

 

அப்பொழுது சிதம்பரம் அருகே தொண்டர்கள் காத்திருந்ததால் முதல்வரின் கார் நிறுத்தப்பட்டது. காரில் இருந்த முதல்வரை சந்தித்த வினோத் என்பவர் தனது ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று முதலமைச்சர் குழந்தைக்கு திராவிடன் என பெயர் சூட்டி வாழ்த்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon