ஆட்சியர் அலுவலகத்தில் மகனுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்..!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு நாள் கூட்டரங்கில் தாய் மகனுடன் தீ குளிக்க முயற்சித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனி திருவிழா நகரை சேர்ந்த நிர்மலா தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.
இதனிடையே அவருக்கு சொந்தமான தொகுப்பு வீடை கணவன் ஏமாற்றி கையொப்பம் வாங்கி வேறு ஒருவருக்கு விற்றதாக புகார் தெரிவிக்கிறார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நிர்மலா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகனுடன் தீக்குளிக்க முயன்றார்.
இருவரையும் மீட்ட காவல் துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





