--- --:--:-- --

பழங்குடியின பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த காவல் ஆய்வாளர்..!

8

விழுப்புரம் அருகே பழங்குடியின பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு காவல் ஆய்வாளரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

திருட்டு வழக்கு ஒன்றிற்காக திருக்கோவிலூர் அருகே உள்ள பழங்குடியின பெண்கள் நான்கு பேரை விசாரணை என்ற பெயரில் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் இருந்தது. இந்த சம்பவத்தில் ஐந்து போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

 

பின்னர் இந்த வழக்கில் நான்கு பேர் ஜாமீன் பெற்ற நிலையில் அரக்கோணம் நகர காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் சீனிவாசன் ஜாமீன் பெறாமல் இருந்து வந்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon