ஜி-20 மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி..!
உச்சி மாநாட்டிற்காக இந்தோனேசியா முழுவீச்சில் தயாராகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு மிக முக்கியமானது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ள 20 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சிய மாநாடு இந்தோனேசியாவில் உள்ள பாலியில் நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதற்காக இந்தோனேசியாவின் தீவு பகுதியான பாலியில் முழுவீச்சில் தயாராகி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதாக நிகழ்வதால் இந்த உச்சி மாநாடு சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் இந்தோனேசிய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
பல உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. உச்சி மாநாடுகள் நடைபெறும் பாலி சுற்றுலாவுக்கு பெயர் பட்டது. இதனால் மாநாடு நடைபெறும் இரு நாட்களுக்கும் அங்குள்ள கடைகளையும் அலுவலகங்களையும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாலியை சுற்றியுள்ள மூன்று மாவட்டங்கள் மற்றும் மாநாடு நடைபெறும் நூர்சா துவா பகுதிகளும் கடைகள் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களை திறக்க வேண்டாம் என்று அரசு உத்தரவிட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





