--- --:--:-- --

மூன்று வயது குழந்தையின் தலையில் மாட்டிய பாத்திரம்..!

4

சென்னை மாதவரத்தில் அலுமினிய பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட மூன்று வயது குழந்தையின் தலையை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். தபால் பெட்டி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் அகிலன் – செவ்வந்திக்கா தம்பதியினரின் மூன்று வயது மகள் அவந்திகா.

 

தாய் செவ்வந்திக்கா சமையல் செய்து கொண்டிருந்த பொழுது அங்கிருந்து அலுமினிய பாத்திரத்தை எடுத்து குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பாத்திரம் தலையில் மாட்டிக் கொண்டதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

குழந்தை தலையில் மாட்டிக் கொண்ட அலுமினிய பாத்திரத்தை பாதுகாப்பாக வெட்டி எடுத்த மாதவரம் தீயணைப்பு துறையினர் பெற்றோருக்கு அறிவுரை வழங்கி விட்டு சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon