--- --:--:-- --

காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டிய காதலன்..!

3

டெல்லியில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலியை கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டார். ஷ்ரதா என்ற 26 வயது பெண் மும்பையில் கால் சென்டரில் வேலை பார்த்த பொழுது சமையல் கலைஞர் ஆன ஆஃப்தா என்பவர் உடன் டேட்டிங்கில் இருந்துள்ளார்.

 

இதனை ஷ்ரதா குடும்பத்தினர் எதிர்த்ததால் டெல்லிக்கு சென்று ஒரே வீட்டில் ஆஃப்தாப்புடன் வசித்து வந்தார். இந்நிலையில் திருமணத்திற்கு ஷ்ரதா வற்புறுத்தியதால் அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து 15 நாட்களாக ஒவ்வொரு குரூப்பாக எடுத்து காட்டில் நள்ளிரவில் ஆஃப்தா வீசி வந்துள்ளார்.

 

ஷ்ரதாவை தொடர்பு கொள்ள முடியாததால் அவரது பெற்றோர் அளித்த புகாரில் விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon