--- --:--:-- --

பட்டாகத்தி வைத்து பொதுமக்களை அச்சுறுத்தும் மாணவர்கள்..!

3

சென்னை வியாசர்பாடியில் பேருந்தில் இளைஞர்கள் பட்டாகத்தியை வைத்து ரகளை செய்த வீடியோ வெளியான நிலையில் இரண்டு கல்லூரி மாணவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

கடந்த மாதம் 28ஆம் தேதி வள்ளலார் நகர் வரை செல்லும் பேருந்து வியாசர் பாடி எருக்கஞ்சேரியில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது படிக்கட்டில் நின்று மாணவர்கள் பட்டாக்கத்திகளை சாலையில் தீட்டி ரகளை செய்து பொதுமக்களை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.

 

வீடியோ காட்சி வெளியானதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதில் ரகளையில் ஈடுபட்டவர்கள் திருவள்ளுரை சேர்ந்த மாணவர்கள் என தெரிய வந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon