நீதிமன்றத்தில் தன் மனைவியுடன் ஆஜரானார் அமைச்சர் பொன்முடி..!
வேலூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக தன் மனைவியுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆஜரானார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் வேலூர் மாவட்ட முதன்மை அவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இன்று காலை 11 மணி அளவில் நீதிமன்றத்தில் அமைச்சர் தன் மனைவியுடன் ஆஜரானார். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





