சாப்பிட தனியாக தட்டு கொண்டு வரவில்லை எனக் கூறி சரமாரியாக தாக்கிய சம்பவம்..!
சாப்பிட தனியாக தட்டு கொண்டு வரவில்லை எனக் கூறி சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அரசு பள்ளியில் தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் சாப்பிடுவதற்கு வீட்டிலிருந்து தட்டு எடுத்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் ஆறு வயது சிறுவன் தட்டி எடுத்து செல்லவில்லை. எனவே ஆசிரியர் ஒருவர் அந்த சிறுவனை பிரம்பால் அடித்து சென்று பள்ளியிலிருந்து வெளியேற்றி உள்ளார்.
அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





