பன்னீர்செல்வம் தொடங்கியுள்ள தர்மயுத்தம் குறித்து அமைச்சர் கண்டனம்..!
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தொடங்கியுள்ள தர்மயுத்தம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே செய்தியாளர்களிடம் பேசியவர் சசிகலாவிற்கு எதிராக தர்ம யுத்தம் நடத்திய ஓபிஎஸ் சசிகலா காலில் விழுந்துள்ளதாக தெரிவித்தார்.
அவர் தொடங்கியுள்ள யுத்தம் கர்மா என்றும் அவர் விமர்சித்துள்ளார். ஓ பன்னீர்செல்வத்தின் பின்னணியில் திமுக இருப்பதாகவும் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





