கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் இரக்கமின்றி தாக்கும் வீடியோ வைரல்..!
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாபுரத்தில் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் இரக்கமின்றி தாக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவில் மாணவரின் சட்டையை கிழித்து கழற்ற வற்புறுத்துவது போன்று பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவன் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் அங்கிருந்தவர்கள் அனைவரும் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





