காதலிக்கும் பெண்ணை பெற்றோர் வீட்டு காவலில் வைத்ததால் போலீசில் புகார்..!
நெல்லையில் தான் காதலிக்கும் பெண்ணை அவர்களது பெற்றோர் வீட்டு காவலில் வைத்ததால் போலீசில் சென்று புகார் அளித்த இளைஞர் ஒருவர் பெண்ணை மீட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தோணி என்பவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
அப்பொழுது அங்கு பணிபுரிந்த சேலத்தை சேர்ந்த பார்த்தசாரதியுடன் காதலர் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்த நிலையில் பார்த்தசாரதி பணி மாறுதலாக மும்பைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் இருவரும் செல்போன் மூலம் காதலித்து வந்தனர்.
பெற்றோர்கள் காதலை ஏற்க மறுத்து உறவினர் ஒருவரின் வீட்டில் அவரை வீட்டு காவலில் வைத்தனர். இதனை பார்த்தசாரதியிடம் தெரிவிக்க பார்த்தசாரதி தன் காதலியை மீட்டுத் தரும்படி போலீசில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் விசாரணை நடத்திய பொழுது அவர் அந்த பெண்ணை கரம்பிடிப்பதில் உறுதியாக இருந்தால் போலீசார் அவருடன் அந்தப் பெண்ணை அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





