பிரதமர் மோடி குறித்து வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய அசம்கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை..!
பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து வெறுப்பை தூண்டு வகையில் பேசிய வழக்கில் அசம்கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மற்றும் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டையடுத்து இது தொடர்பாக அசம்கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் அசம் காலுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது எம்எல்ஏ பதவி பரிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





