கட்சித் தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு..!
கட்சித் தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும் அந்த கட்சி அலுவலகங்களில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜூனா கார்கே கர்நாடகாவிலும், வாக்களித்தார்.
கட்சியின் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வாக்களித்தனர். கர்நாடகாவில் ராகுல்காந்தி அங்கு அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
தமிழகத்தில் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள மொத்த வாக்குகள் 715. 662 வாக்குகள் மட்டுமே பதிவாகின. மூத்த தலைவர் குமரி அனந்தன் தபால் வாக்கு செலுத்தினார். சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் வாக்களித்தனர்.
தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற்றதாக வாக்களித்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக திருநாவுக்கரசரும் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி கொடுக்கும் என கார்த்திக் சிதம்பரமும் கூறியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




