--- --:--:-- --

ஆண்டுக்கு இரண்டு சமையல் கேஸ் சிலிண்டர் இலவசம்..!

2

குஜராத்தில் ஆண்டுக்கு இரண்டு சமையல் கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. விரைவில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆளும் பாரதிய ஜனதா அரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

 

பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. சிஎன்ஜி, பிஎன்ஜி சிலிண்டர் மீதான வாட் வரி 10 விழுக்காடு குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் நுகர்வோருக்கு சிஎன்ஜி சிலிண்டர் விலை கிலோவுக்கு 3 ரூபாய் விலை, பிஎன்ஜி சிலிண்டர் 6 ரூபாயும் குறைய வாய்ப்புள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon