லிப்ட் தருவது போல காரில் ஏற்றிச் சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை..!
ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண்களுக்கு லிப்ட் தருவது போல காரில் ஏற்றிச் சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகைகளை பறித்ததாக இளைஞரை ஒரகடம் போலீசார் கைது செய்தனர்.
குன்னவாக்கம் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் வேலைக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்ற பொழுது காரில் வந்த இளைஞர் லிப்ட் கொடுத்து ஏற்றிச் சென்று கத்தியை காட்டி வன்கொடுமை செய்து 4 கிராம் நகைகளை பறித்து விட்டு ஆளில்லாத இடத்தில் இறக்கிவிட்டு தப்பியதாக தெரிகிறது.
இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் 32 வயது பெண்ணும் புகார் அளித்தார். இதனடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் கூடுவாஞ்சேரி அருகே உள்ள வள்ளலார் நகரை சேர்ந்த சதாம் உசேனின் காரை பறிமுதல் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





